வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/04/2018)

கடைசி தொடர்பு:22:00 (20/04/2018)

`பற்றாக்குறையால் புத்தகம் இல்லாமலே கல்வி பயிலும் மாணவர்கள்' - உத்தரப்பிரதேசத்தில் அவலம்!

புத்தகம் பற்றாக்குறையால் மாணவர்கள் புத்தகம் இல்லாமல் படிக்கும் அவலநிலை உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ளது. 

இரண்டுவார கோடை விடுமுறைக்குப் பின் உத்தரப்பிரதேசத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்குப் புத்தகம் வழங்க வேண்டும். ஆனால், கோரக்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் புத்தகங்கள் இல்லாமல் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சில பள்ளிகளில் பழைய மாணவர்களிடமிருந்து புத்தங்கள் பெறப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுகுறித்து கோரக்பூர் அரசுப் பள்ளி ஆசிரியர் சரிதா கூறுகையில், ``அரசிடமிருந்து இன்னும் புத்தகங்கள் வரவில்லை. கடந்த வருடம் பயின்ற மாணவர்களிடமிருந்து நாங்கள் புத்தங்களை வாங்கிச் சொல்லிக்கொடுத்து வருகிறோம். இந்த வருடத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் சொல்லிவருகிறது. ஆனாலும் புத்தகங்கள் இன்னும் வந்துசேரவில்லை. இதனால் குழந்தைகளின் கல்வி பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றார்.  

இதுகுறித்து அரசு கூடுதல் செயலாளர் யோகேந்திரநாத் சிங், ``குறைந்த அளவு டெண்டர் விட்டதன் காரணமாகச் சரியான நேரத்துக்குப் புத்தகங்களை அச்சிடமுடியவில்லை. பணிகள் நடைபெற்றுவருகின்றன. முடிந்தவரை, பள்ளிகளுக்கு விரைவில் புத்தங்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். பள்ளி தொடங்கும் முன்பே புத்தகங்கள் வர வேண்டிய நிலை மாறி இன்னும் புத்தகம் வராமல் உள்ளதால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதற்கு யோகி ஆதித்யநாத் அரசு அளித்துள்ள முரணான விளக்கம் உத்தரபிரதேசத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புத்தகம் அச்சிடும் பணிக்குக் குறைந்த அளவிலேயே டெண்டர் விடப்பட்டதை அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க