நெல்லையப்பர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக நெல்லை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நெல்லையின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் கடந்த ஆண்டு இறுதியில் பாலாலயம் நடைபெற்று திருப்பணிகள் நடைபெற்று வந்தன. கோயில் கோபுரங்கள், மண்டபங்கள், சுவாமி சந்நிதிகள் ஆகியவற்றில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 

நெல்லையப்பர் கோயிலின் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அன்றைய தினம் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கும்பாபிஷேக பணிகள்

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், மே 12-ம் தேதியான இரண்டாம் சனிக்கிழமை பணிநாளாக அரசு உத்தரவின்பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக்கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் நடைபெறும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவகையில் இருக்க வேண்டும் எனவும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!