வெளியிடப்பட்ட நேரம்: 21:39 (20/04/2018)

கடைசி தொடர்பு:21:39 (20/04/2018)

`ஜூன் 7-ல் காலா ரிலீஸ்!’ - தயாரிப்பாளர் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

சினிமா வேலை நிறுத்தம் முடிந்து, காவிரி பிரச்னை, ஐபிஎல் போராட்டத்தில் போட்ட ட்வீட் என அனைத்தையும் தாண்டி ரஜினி `காலா’வாக வரவுள்ளார்

ரசிகர்கள் வெகு நாள்களாக எதிர்பார்த்திருக்கும் காலா படத்தின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார். 

காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்து வந்த வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாள்கள் கழித்து இன்றுதான் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இந்த இடைப்பட்டக் காலத்தில் வெளியாகாமல் பல படங்கள் தேங்கின. அதனால், ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களை அவற்றின் தயாரிப்பாளர்கள் விருப்பத்திற்கேற்ப ரிலீஸ் செய்யும் வகையில் 2 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அதன்படி ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த காலா திரைப்படம் ஜூன் 7 ம் தேதி வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருக்கிறார். இந்திய அளவில் எதிர்பார்ப்புள்ள `காலா’ படம் ரம்ஜான் மாதத்தின் இறுதியில் வெளியாவது, படத்தின் ஓப்பனிங்கில் சற்று தொய்வை ஏற்படுத்தும் என்கிறார்கள் வர்த்தக வட்டாரத்தில். இருப்பினும் இண்டாவது வாரமும் நல்ல  கூட்டம் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ விஷால் கூறியதுபோல் டிக்கெட் விலை விண்ணை முட்டாமல் இருந்தால் சரி.