சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை..! 15 பேரை அதிரடியாகக் கைதுசெய்த காவல்துறை!

மதுபானம்

திருப்பூரில், பல இடங்களில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திருப்பூர் மாநகரில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு சிக்கலும் இல்லாமல், 24 மணி நேரமும் தங்குதடையின்றி நடைபெற்றுவரும் இந்த மதுபான விற்பனையால், மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். 

இந்நிலையில், சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாகக் காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் நாகராஜன், உடனடி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு  உத்தரவிட்டார். அதனடிப்படையில், திருப்பூர் மாநகர் முழுவதும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை மேற்கொண்ட மணிமாறன், செந்தில்குமார், முரளிதரன், கருப்பையா, பன்னீர்செல்வம், பாலமுருகன் உள்ளிட்ட 15 பேரை அதிரடியாகக் கைதுசெய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 250 மது பாட்டில்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!