ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி முதலிடம்பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!#CSKvRR | chennai super kings beat rajasthan royals by 64 runs

வெளியிடப்பட்ட நேரம்: 00:04 (21/04/2018)

கடைசி தொடர்பு:08:42 (21/04/2018)

ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தி முதலிடம்பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!#CSKvRR

புனேவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில்வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் 2018 -ல், இன்று புனே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பௌலிங்கைத் தேர்வுசெய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கொண்டாட்டம்

Photo: Twitter/IPL

தொடக்க ஆட்டக்காரராக ஷேன் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் களமிறங்கினர். 8 ரன்களில் ராயுடு அவுட்டாக, வாட்சனும் ரெய்னாவும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம்செய்தனர். 46 ரன்களில் ரெய்னா பெவிலியன் திரும்பினார். ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், வாட்சன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 20 ஓவரின் முடிவில் சென்னை அணி 204 ரன்கள் குவித்தது. 

பிராவோ205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானேவும் க்ளாசனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான், 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர், பட்லர் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி நிதானமாக விளையாடி, அணியை மீட்கும் பணியில் இறங்கியது. 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் பட்லர் அவுட்டாக, அடுத்த சில ஒவரிலேயே பென் ஸ்டோக்ஸும் பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்தவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ராஜஸ்தான் அணி. இதன்மூலம், சிஎஸ்கே அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 47 ரன்கள் குவித்தார்.  சென்னை அணி சார்பில் தாக்கூர், சாஹர், பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஷேன் வாட்சன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை, 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க