எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” சி.பி.எம் வலியுறுத்தல்! | CPM secretory demand action against s.vee sekar

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (21/04/2018)

கடைசி தொடர்பு:07:35 (21/04/2018)

எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” சி.பி.எம் வலியுறுத்தல்!

எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வன்மையாகக் கண்டித்துள்ளது.

இக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, "தமிழக ஆளுநர் பன்வாரிலால் பேட்டியின்போது, பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தைத் தொட்டு அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதை அரசியல் கட்சிகள் கண்டித்தன;  பத்திரிகையாளர்களும் கண்டித்தனர். 

கே.பாலகிருஷ்ணன்(சி.பி.எம்)

இந்நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த  எஸ்.வி.சேகர்,  ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி மிகவும் தரக்குறைவாகப் பதிவிட்டிருந்தார்.  

  அதைக் கண்டித்து, பத்திரிகையாளர்கள் இன்று பா.ஜ.க அலுவலகம் முன்பும், எஸ்.வி.சேகர் வீட்டு முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், பெண் பத்திரிகையாளர் உட்பட 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் உள்ளிட்ட மக்கள் மதிக்கும் தலைவர்கள், பெண்கள், பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசுவது, அவமரியாதை செய்வதை ஹெச்.ராஜா, எஸ்.வி. சேகர் போன்ற பா.ஜ.க-வினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். இவர்கள்மீது தமிழக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைபார்த்துவருகின்றனர். ஆனால்,  நியாயம் கேட்டு போராடுபவர்களைக் கைதுசெய்து வருவது ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

எனவே, பெண் பத்திரிகையாளர்களைக் கொச்சைப்படுத்திப் பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க