‘சுட்டெரிக்கும் கோடை வெயில்’ - திருச்சி போலீஸாருக்கு சன்கிளாஸ் வழங்கிய கண் மருத்துவமனை

கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்க திருச்சி போலீஸாருக்கு சன் கிளாஸ் வழங்கப்பட்டது 

சன் கிளாஸ்

திருச்சி மாநகர போக்குவரத்துக் காவலர்கள், கோடைக்கால வெப்பத்திலிருந்து தங்கள் கண்களைப் பாதுகாக்க, திருச்சி டாக்டர் அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை சார்பில் சன்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகர இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன்,  டாக்டர் அகர்வால்'ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எம்.டி.கே ராமலிங்கம் மற்றும் டாக்டர் ரோச் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் எம்.டி.கே ராமலிங்கம், “மலிவான விலையில் கிடைக்கும் கண்ணாடிகளை அணிவதால், வெப்பக் கதிர்வீச்சினால் விரைவில் கண்புரை நோய் வரக்கூடும்.  அதனால், தரமான சன்கிளாஸ்களைப் பயன்படுத்த வேண்டும். அல்ட்ரா வைலட் கதிர்வீச்சினால் கண்கள் பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் வெப்பம் அதிகமாக உள்ளதால் கோடைக்காலத்தில் அனைவரும்  கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நல்ல தரமான கண்ணாடிகளை அணிய வேண்டும்” என்றார்.

இறுதியில் பேசிய திருச்சி டி.சி. மயில்வாகனன், “கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதாலும், மாசு மற்றும் வண்டியில் வரும் கரும் புகையினாலும் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அனைவரும் தரமான சன்கிளாஸ்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மற்றும் வருடத்துக்கு ஒருமுறை அனைவரும் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கோடை வெயில் தாக்கத்திலிருந்து போலீஸாரை காப்பதற்காக, வழக்கமான தொப்பிக்கு பதிலாக, கூலிங் தொப்பி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!