வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (21/04/2018)

கடைசி தொடர்பு:13:09 (21/04/2018)

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குப் படகுப் போக்குவரத்து ரத்து!

கடல் சீற்றம் எச்சரிக்கையால் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

டல் சீற்றம் எச்சரிக்கையால், கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்குப் படகுப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டுள்ளது.

படகு

ராமேஷ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு, படகுப் போக்குவரத்து இன்று காலை முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த இரண்டு படகுகளும் குழாமில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும், எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 400 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. படகுகள், துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. பைபர் படகுகள், வள்ளங்களில் மீன்பிடித் தொழில்செய்யும் மீனவர்களும்  கடலுக்குச் செல்லவில்லை. கடல் சீற்றம் எச்சரிக்கை காரணமாக, சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி கடற்கரை வெறிச்சோடியது. இது மட்டுமல்லாது குளச்சல், தேங்காப்பட்டணம், முட்டம் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களிலிருந்தும் பைபர் படகு, கட்டுமர மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் முடங்கினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க