வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/04/2018)

கடைசி தொடர்பு:20:20 (21/04/2018)

கர்நாடகாவில் 3 தொகுதிகளில் களமிறங்கும் அ.தி.மு.க! - வேட்பாளர்கள் அறிவிப்பு

கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

 

224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி ஆளும் கட்சியான காங்கிரஸும் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வும் பிரசாரத்தைத் துரிதப்படுத்தியுள்ளன. காங்கிரஸை வீழ்த்தி இந்தமுறை ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று நோக்கில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா பெங்களூருவில் தனி வீடு எடுத்தே குடியேறியுள்ளார். இதேபோல், ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் எனக் காங்கிரஸும் முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி, சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தனர். விரைவில் பா.ஜ.க வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கர்நாடகத் தேர்தலில் அ.தி.மு.க மூன்று தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அறிவித்துள்ளதாவது, ``அ.தி.மு.க ஆட்சிமன்றக் குழு எடுத்த முடிவின்படி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, காந்திநகர் தொகுதியில் யுவராஜும் ஹனூர் தொகுதியில் விஷ்ணுகுமாரும் கோலார் தங்கவயல் தொகுதியில் மு.அன்பு ஆகியோரும் போட்டியிடுவர்" எனத் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க