`எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை!’ - மத்திய அமைச்சர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் புகார் | Nagercoil journalists files complaint against Sve Sekar

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/04/2018)

கடைசி தொடர்பு:21:00 (21/04/2018)

`எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை!’ - மத்திய அமைச்சர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் புகார்

பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவுசெய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்ககேட்டு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் நாகர்கோவில் பிரஸ்கிளப் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

த்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவுசெய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முகாம் அலுவலகத்தில் நாகர்கோவில் பிரஸ் கிளப் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

எஸ்.வி.சேகர் சேகர் மீது புகார்

பிரஸ்மீட்டில் பெண் பத்திரிகையாளர் கன்னத்தை கவர்னர் தட்டிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதை தொடர்ந்து சினிமா நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பதிவை நீக்கியதுடன், வேறு ஒருவரின் பதிவை படிக்காமல் ஷேர் செய்ததாக மன்னிப்பும் கோரினார். எஸ்.வி.சேகரின் கருத்துக்கு பத்திரிகையாளர்கள் பல்வேறு விதமாக எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் பிரஸ் கிளப் தலைவர் மதன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் முகாம் அலுவலகத்தில் இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்த நாகர்கோவில் பிரஸ்கிளப் நிர்வாகிகள்

அந்த மனுவில், எஸ்.வி.சேகர் பா.ஜ.க.வை சேர்ந்தவர். பெரிய பொறுப்புக்களில் இல்லாவிட்டாலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி படம் உள்ளது. இதுபோன்ற அருவருக்கத்தக்க பேச்சு பேசுபவர் இருப்பது அந்த கட்சிக்கே அழகாக இருக்குமா என்பதை சிந்தித்து, பெண்மையை களங்கப்படுத்தி, இழிவுபடுத்திய பேசிய அவர்மீது கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்று எஸ்.வி.சேகர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி எஸ்.பி. அலுவலகத்திலும் நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.