எஸ்.சி/எஸ்.டி. சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு! - கோவில்பட்டியில் ரயில் மறியல் | Aathi Thamizhar Katchi members staged protest in Kovilpatti railway station

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (22/04/2018)

கடைசி தொடர்பு:01:30 (22/04/2018)

எஸ்.சி/எஸ்.டி. சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு! - கோவில்பட்டியில் ரயில் மறியல்

எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை பாதுகாக்க வலியுறுத்தியும், இதில் மத்திய ,மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தினைப் பாதுகாக்க வலியுறுத்தியும், இதில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கை கண்டித்தும் கோவில்பட்டியில் ஆதித்தமிழர் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். 

  கோவில்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 52 பேர்  கைது

எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தினை பாதுகாக்க வேண்டும், அரசியலமைபபுச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இதில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் கோவில்பட்டி ரயில் நிலையம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் முன்பாக, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கோவில்பட்டி டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார்  போராட்டத்தில் ஈடுபட்ட  10 பெண்கள் உட்பட 52  பேரை கைது செய்தனர். இதனால், ரயில் நிலையத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 கோவில்பட்டியில் ரயில் மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 52 பேர்  கைது

ஆர்ப்பாட்டத்தில் பேசிய, அக் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் விடுதலை வீரன், ”எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் பல வழிமுறைகளை பிரதமர் மோடி செய்து வருகிறார். இதற்கு நீதிமன்றமும் துணைபோவது போலவே தெரிகிறது. மாநில அரசும் இதனை கண்டிக்காமலும் மத்திய அரசிற்கு துணை போகிறது. இச் சட்டம் திருத்தம் செய்வது கண்டிக்கத்தக்கது. அந்த திருத்தங்கள், எஸ்.சி, எஸ்.டி., மக்கள் மீதான நேரடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும். இதனால் அந்த மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத  சூழல் உருவாக வாய்ப்பு ஏற்படும். எனவே, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அரசியலமைபபுச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இந்த சட்டத்தைச் சேர்த்திட வேண்டும் இதற்கு மாநில அரசும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க