அரசு விளம்பரங்களில் புறக்கணிக்கப்படும் ஓ.பி.எஸ் - அ.தி.மு.க-வுக்குள் வெடிக்கும் சர்ச்சை..!

தமிழக அரசின் விளம்பரங்கள், அரசு நிகழ்ச்சி அழைப்பிதழ்களில், விழாக்களில் வைக்கப்படும் பேனர்களில் துணை முதலைமைச்சர் ஓ.பி.எஸ் படம் சமீபகாலமாக தவிர்க்கப்பட்டு வருவதை பார்த்து அவருடைய ஆதரவாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஓ பி எஸ்

தனித்து இயங்கிய ஓ.பி.எஸ்ஸை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்கும்போது, முதலமைச்சர் எடப்பாடிக்கு இணையான மரியாதை வழங்கப்படும், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பொறுப்புகள் பகிர்ந்து அளிக்கப்படும் என உறுதி அளித்ததாக தகவல் வெளியானது.  ஆனால் அ.தி.மு.க-வில் இணைந்த பின் மதுரையில் ஆர்.பி.உதயகுமார் நடத்திய கொடியேற்றுவிழா நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ்.பெயர் புறக்கணிக்கப்பட்டது. அது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபகாலமாக அரசு விழாக்களின் நாளிதழ் விளம்பரங்கள், அரசு விழா அழைப்பிதழ்கள், விழா மேடைகளில் வைக்கப்படும் விளம்பரங்களில் மீண்டும் ஓ.பி.எஸ் பெயர், படம்  புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அரசு

கடந்த வாரம் மதுரையில் நடந்த கலெக்டர் அலுவலக பூமி பூஜை விழாவில் ஓ.பி.எஸ் பெயர் புறக்கணிக்கப்பட்டது. இன்று மாலை தொடங்கவுள்ள சித்திரை திருவிழா பொருட்காட்சி  விழா அழைப்பிதழிலும் ஓ.பி.எஸ் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த அழைப்பிதழில் இன்னொரு பக்கத்தில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த படம் இடம் பெற்றிருந்தாலும், அதன் கீழே எடப்படியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. இதனால் மீண்டும் ஓ.பி.எஸ். கட்சியில் ஓரம் காட்டப்படுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!