`பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஆளுநரை மாற்றுவதே நல்லது!’ - திருநாவுக்கரசர்

” மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி சிறையில் உள்ளார். இதில், ஆளுநர் அமைத்துள்ள விசாரணை கமிஷன் பிரச்சினையை திசை திருப்பும். மேலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஆளுநரை மாற்றுவதே நல்லது.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

”மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி சிறையில் உள்ளார். இதில், ஆளுநர் அமைத்துள்ள விசாரணை கமிஷன் பிரச்னையை திசை திருப்பும். மேலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஆளுநரை மாற்றுவதே நல்லது.” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

thirunavukkarasar  meet to prees

தூத்துக்குடி  காங்கிரஸ் மாநகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததால், அவர் எப்பொழுது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டப்படும். பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.,வும் தங்களது நன்மைக்கு இணக்கமாக உள்ளனர். ஆனால், அவர்கள் மத்திய, மாநில அரசுகளாகச் செயல்படும் போது இணக்கமாகச் செயல்படவில்லை என்றே தோன்றுகிறது. மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதால் தான் தமிழகத்தின் வளர்ச்சியின் கீழ் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அ.தி.மு.க., அரசு பா.ஜ.க.,வின் பினாமி அரசுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தமிழக ஆளுனரை மத்திய அரசு நியமனம் செய்திருந்தாலும் கூட, அவர் எல்லோருக்கும் பொதுவானவர். எந்தக் கட்சியையும் சாராமல் மற்ற கட்சிகளைக் குறை சொல்லாமல் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால், தமிழகத்தில் அந்த நிலைப்பாடு இல்லை. இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது.  கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி, தற்போது சிறையில் உள்ளார். இதில், ஆளுநர் அமைத்துள்ள விசாரணை கமிஷன் பிரச்னையை திசை திருப்பும். மேலும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி உள்ள ஆளுநரை மாற்றுவதே நல்லது.  

பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடுமையான சட்டத்தினைக் கொண்டு வர வேண்டும்.  தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் நக்சலைட்கள் ஊடுருவியுள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக, மக்களால் நடத்தப்படுகிறது.

 இதில் நக்சல்கள் ஊடுருவி உள்ளதாக அவருக்குத் தெரிந்தால், உளவுத்துறை மூலம் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட்  ஆலையை மூடிட வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது மூடப்பட வேண்டிய ஆலைதான்.  எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் தனிநபர் விமர்சனத்தில்  தெரிவிக்கும் கருத்துக்கள் மிகவும் கீழ்த்தரமானது. மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!