கடல் சீற்றத்தால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்! - கன்னியாகுமரி கடலோர கிராம மக்கள் தவிப்பு

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் 30 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. மீன்பிடி படகுககள் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் படகுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட அழிக்கால் கடலோர கிராமத்தில்  கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இப்போதும் சுமார் 30 வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதையடுத்து சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் அழிக்கால் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று மண்டைக்காடு புதூர் பகுதியில் 5க்கும் மேற்பட்ட விடுகளில் தண்ணீர் புகுந்தது. பின்னர் தண்ணீர் வடிந்து சென்றுவிட்டது. மேலும் தேங்காய்ப்பட்டினம், இரயுமன் துறையில் கடற்கரை மணற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகளை கடல் அலை இழுத்துச் சென்றதால் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!