நிர்மலா தேவி விவகாரம்! - பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி தீவிர விசாரணை | CBCID police enquires Nirmala devi colleagues

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (22/04/2018)

கடைசி தொடர்பு:15:15 (22/04/2018)

நிர்மலா தேவி விவகாரம்! - பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி தீவிர விசாரணை

 

நிர்மலா தேவி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்ல ஆசை வார்த்தை காட்டிய பேராசிரியை நிர்மலாதேவி கடந்த 17 -ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து அவரை ஐந்து நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது சி.பி.சி.ஐ.டி போலீஸ்.

இன்று, நிர்மலா தேவியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், செல்போன் போன்றவற்றின் விபரங்களை எடுத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், நிர்மலா தேவியுடன் பணியாற்றியவர்களை விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு  வரவழைத்து விசாரித்து வருகின்றனர். அதன்படி இன்று நிர்மலா தேவியுடன் புத்தாக்க பயிற்சியில் இருந்த பெண் பேராசிரியையை விசாரித்து வருகின்றனர். மேலும் கரூரை சேர்ந்த ரயில்வே துறை பணியாளர்களான திவான், திவாகர் மற்றும் நிர்மலா தேவிக்கு தெரிந்த நபர்கள் என அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்திவருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புத்தாக்க பயிற்சி அளித்த இயக்குநர் கலைச் செல்வன், புத்தாக்க பயிற்சிக்கு சென்ற திருச்சியை சேர்ந்த பேராசிரியையிடமும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சிபிசிஐடி  குழுவினர் நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்குச் சென்றும் விசாரித்து வருகின்றனர்.