வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (22/04/2018)

கடைசி தொடர்பு:16:20 (22/04/2018)

மகாராஷ்டிராவில் 14 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை!

நக்ஸலைட் - சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 14 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தட்கான் - கஸ்னூர் வனப்பகுதியில் இந்த மோதல் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். நக்ஸலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கட்சிரோலி மாவட்டக் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், போலீஸாரின் தாக்குதலில் நக்ஸலைட்டுகள் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் போலீஸ டி.ஐ.ஜி அங்குஷ் ஷிண்டே தெரிவித்தார்.

தொடர்ந்து அந்தப் பகுதியில்  நக்ஸலைட்டுகளை  தேடும் பணி நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க