`பண்ருட்டியில் களைகட்டும் பலாப்பழ சீசன்' - மகிழ்ச்சியில் விவசாயிகள்

பண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். பண்ருட்டி பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று மார்கெட்டில் தனி இடம் உண்டு.

பண்ருட்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பலாப்பழம். பண்ருட்டி பலாவிற்கு என்று தனி சுவை உண்டு. தமிழகம் முழுவதும் பலாப்பழம் விளைந்தாலும், பண்ருட்டியில் பலாவிற்கு என்று மார்கெட்டில் தனி இடம் உண்டு. அதற்குக் காரணம் அதன் அலாதியான சுவை. பண்ருட்டி பகுதியில் உள்ள மண் வளம், தட்ப வெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்குக் காரணம். 

பண்ருட்டி பலாப்பழம்

வருடா, வருடம் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் பலாப்பழம் விளையும் சீசன் ஆகும். பண்ருட்டி அருகே உள்ள நெய்வேலி, சொரத்தூர், கடாம்புலியூர்,  பணிக்கன்குப்பம், மேலிருப்பு, மாம்பட்டு உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் பலாப்பழம் விளைகின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பழங்கள் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கும், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் அதிக அளவில் அனுப்பிவைக்கப்படுகிறது. 

இந்த வருடம் தட்ப வெப்ப நிலை சாதகமாக இருந்ததால் பலா விளைச்சல் அதிகமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பலாப்பழம் ஒன்று ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது. நெய்வேலியில் ஆரம்பித்து பண்ருட்டி வரை சாலை ஓரம் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழங்களைச் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்குச் செல்பவர்களும், கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு கார், வேன் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!