`போராட்டம் முடிந்துவிடும் என நினைத்தால் அது அரசியல் அறியாமை' - அரசைச் சாடும் கமல்ஹாசன்!

நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறார் கமல்ஹாசன். தொண்டர்களுடன் கலந்துரையாடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது என அவரின் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில்  கமல்ஹாசன் இன்று யு-டியூப் லைவில் பேசினார். அப்போது,   ``நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பது, பள்ளிகளில் மின் வசதி உள்ளிட்டவற்றைத் தன்னார்வலர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். விரைவில் மய்யம் விசில்   `ஆப்' அறிமுகம் செய்யப்படும். 

அந்தச் செயலி மூலம் மிகப்பெரிய அளவில் குறைகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக அரசாங்கம் தீர்வை நோக்கி நகர்ந்தே தீர வேண்டும். மக்கள் மற்றும் ஊடகத்தின் கேள்விக்கு ஏன் பதிலளிக்க வேண்டும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு வந்துவிட்டது. இதற்குத் தீர்வு காணவே அரசியலுக்கு வந்திருக்கிறேன். குடிநீருக்காக நடைபெறும் போராட்டம், குறிப்பிட்ட காலத்துக்கு பின் முடிந்துவிடும் என நினைத்தால் அது ஒரு அரசியல் அறியாமை" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!