நிர்மலா தேவி விவகாரம் - ஆராய்ச்சி மாணவர், பேராசிரியரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி தீவிரம் !

 

நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பாலியல் புகாரில் கைதான பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்நாள் விசாரணையின்போது காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணை பேராசிரியர் முருகன் ஆகியோரது தூண்டுதலின் பேரில் தான் மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி தெரிவித்தார். மேலும் இந்தச் சம்பவத்தில் உயர் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உண்டு எனக்கூறிய அவர், அவர்களது பெயர் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எனினும் நிர்மலா தேவி தம்மைப் பற்றி தகவல் தெரிவித்துவிடுவார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் பதுங்கி வருகிறது.

இந்நிலையில் தலைமறைவான கருப்பசாமியைத் தேடி வந்த நிலையில் இன்று கருப்பசாமியின் சொந்த ஊரான திருச்சுழி அருகில் உள்ள நாடாகுளம் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தலைமறைவாக உள்ள காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் துணை பேராசிரியர் முருகன் ஆகியோரைப் பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடக்கும் எனத் தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!