`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு

தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைகளுக்காக விஷாலை பாராட்டியுள்ளார் கமல். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் கடந்த இரு மாதங்களாக வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வேலை நிறுத்தத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தரப்பு `சீரமைப்பு' என்று கூறி வருகிறது.

கமல் விஷால்

டிஜிட்டல் சர்வீஸ் நிறுவனக் கட்டணங்கள் குறைத்தது, தியேட்டர்களைக் கணினிமயமாக்கி டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை, சிறு மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கேற்றாற்போல் டிக்கெட் விலை நிர்ணயம் ஆகிய நடவடிக்கைகளால்  தயாரிப்பாளர்களுக்கும் பொதுவாகத் தமிழ் சினிமாத்துறைக்கும் பல நன்மைகள் கிடைத்துள்ளதாகக்கோலிவுட்டில் பரவலாகப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், விஷாலை தொடர்புகொண்டு, "கால் நூற்றாண்டா யாரும் செய்ய முடியாத காரியங்களைச் சாதிச்சிருக்கீங்க. நீங்களும் உங்க அணியும் தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயங்கள் தொடர்ந்து செய்யுங்க விஷால்" என்று வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாகப் பல விஷயங்களை விஷாலிடம் கேட்டறிந்துள்ளார் என்று விஷால் தரப்பு கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து விஷால், கமலை சந்தித்தார். நடிகர் சங்கத் தேர்தலிலிருந்தே விஷால் அணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!