`சுட்டால் ஒரு குண்டுதான் வரும்; இரண்டு குண்டுகள் வராது'- கூட்டணி கேள்வியால் கலகலத்த தம்பிதுரை

தம்பிதுரை

பா.ஜ.க-வுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கலகலப்புடன் பதில் அளித்துள்ளார் அ.தி.மு.க எம்.பியும் மக்களவை துணை சபாநாயருமான தம்பிதுரை.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை தம்பிதுரை சந்தித்தார். அப்போது, 'வரும் நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்குமா' என்று கேள்வி எழுப்பினர். இதற்று பதில் அளித்த அவர், 'பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு எடுக்கும்' என்று கூறினார்.

அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று விமர்சனம் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, 
இரட்டைக்குழல் துப்பாக்கி என்பது தவறான செய்தி. துப்பாக்கியில் இருந்து சுட்டால் ஒரு குண்டுதான்வரும்; இரண்டு குண்டுகள் எல்லாம் வராது. தமிழகத்தில் இரட்டைக்குழல் துப்பாக்கி எல்லாம் இல்லை. ஒரு குழல் துப்பாக்கிதான் இருக்கிறது என்று தம்பிதுரை கலகலத்தார்.

மேலும் அவர் கூறுகையில், மாநிலக்கட்சிகளின் நிலைப்பாடு வேறு; தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு வேறு. மத்திய அரசும் மாநில அரசும் இணக்கமாக இருக்க வேண்டும். அரசுகளின் இணக்கத்துக்கும் கட்சிகளுக்கும் தொடர்பு இல்லை" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!