ரஜினிகாந்த்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு..!

நடிகர் ரஜினிகாந்த்தை துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். 

குருமூர்த்தி

சோ ராமசாமி மறைவுக்குப் பிறகு, துக்ளக் இதழை நிர்வகித்து வருகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி. மேலும், அவ்வப்போது, இவர் தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்திவரும். அந்தவகையில், ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றிபெற்றபோது ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் பற்றி இவரின் விமர்சனத்தால் சர்ச்சை வெடித்தது. மேலும், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-க்கு குருமூர்த்திதான் ஆலோசனை கொடுக்கிறார் என டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.  

இந்நிலையில், புதிதாகக் கட்சித் தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தை குருமூர்த்தி சந்தித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. சந்திப்பின்போது இருவரும் ஆலோசனை நடத்தினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தது முதல் ரஜினிகாந்த்தை பா.ஜ.க-வின் பிம்பம் என அரசியல் கட்சிகள் விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!