சென்னை அண்ணாநகரை கலங்கடித்த கொள்ளையர்கள் 

கொள்ளை

சென்னை அண்ணாநகரில் அடுத்தடுத்து கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவர், செனாய் நகர், எட்டாவது குறுக்குத் தெருவில் மருந்துக்கடை நடத்திவருகிறார். இன்று காலை கடையைத் திறக்க நாராயணன் வந்தார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரிந்தது. இதுகுறித்து அவர் அண்ணாநகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இவரின் கடைக்கு அருகில் வ.உ.சி. நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஸ்டேஷனரி கடை நடத்திவருகிறார். இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரும் அண்ணாநகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.  அண்ணாநகரை அடுத்த செனாய் நகரில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவரின் வீட்டிலிருந்து வைரம், தங்கம், பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!