வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (23/04/2018)

கடைசி தொடர்பு:15:50 (23/04/2018)

கன்னியாகுமரி படகு சேவை மூன்றாவது நாளாக ரத்து! சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு படகு சேவை மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

டல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு படகு சேவை மூன்றாவது நாளாக இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

படகு சேவை மூன்றாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என கடந்த 20-ம் தேதி இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து கடந்த 21-ம் தேதி காலை முதல் ரத்து செய்யப்பட்டது. கடல் சீற்றத்தால் மீனவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து, நேற்றும் கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது நாளான இன்றும் கடல் சீற்றமாக காணப்படுவதாலும், காற்று வேகமாக வீசுகிறது. இதனால் இன்றும் விவேகானந்தர் நினைவுப் பாறைக்குப் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலகம் மூடப்பட்டிருந்தது. மூன்றாவது நாளாக படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.