`அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டது!’ - வைகோ விமர்சனம்

பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

வைகோ

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு பேட்டோகிராஃபர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் சங்கம் சார்பில் இன்று தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் அருகில் இன்று உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷாவை கிண்டலான வார்த்தைகளால் விமர்சனம்செய்து பேசினார். இதனால், உண்ணாவிரதத்தில் இருந்தவர்கள் பசி மறந்து சிரித்தனர். பொதுமக்கள் ஆரவாரமாகக் கைதட்டினார்கள்.

வைகோ என்று சொன்னாலே, அவரது ஆவேசப் பேச்சுதான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கடந்த சில மாதங்களாக, தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் டென்ஷனாகவே காணப்பட்டார். இந்நிலையில், தஞ்சாவூரில் போட்டோகிராஃபர்கள் மற்றும் வீடியோகிராஃபர்கள் சங்கம் நடத்திய உண்ணாவிரதத்துக்கு வழக்கமான வேட்டி-சட்டை கறுப்புத் துண்டு அணியாமல் பேன்ட் - சட்டை அணிந்து வந்தார். இதில் உரையாற்றிய வைகோ, மிகவும் அமைதியாகவும் கிண்டலாகவும் பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அவர் பேசுகையில், `‘நாங்கலெல்லாம் தண்ணீருக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த காலத்துல, தஞ்சாவூர் மக்கள் ரொம்பவே ஜாலியா இருந்தாங்க. விறால் மீனை நல்லா வறுத்து சாப்பிட்டுட்டு, பாட்டு கேட்டுக்கிட்டு, டான்ஸ் பார்த்துக்கிட்டு ஜாலியா இருந்தாங்க. விவசாயிகள் பச்சைத் துண்டு அணியிற மாதிரி, இந்த ஊர்க்காரங்க, இடுப்புல ஒரு பச்சை பெல்ட் கட்டிக்கிட்டு, வாய்க்கால்ல நின்னுக்கிட்டு, காலாலயே தண்ணீர் பாய்ச்சுவாங்க. காரணம், காவிரித் தண்ணீர் அப்பெல்லம் பெருக்கெடுத்து ஓடிச்சு. நம்ம தமிழ் மக்கள் இங்கயாவது நல்லா செழிப்பா இருக்காங்களேனு நான் ரொம்பவே சந்தோஷப்பட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா இப்ப, காவிரித் தண்ணீர் கிடைக்காம பெரும் துயரத்துல இருக்கீங்க. மத்திய அரசு இனி எப்போதுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. தமிழ்நாட்டை பஞ்சப்பிரதேசமாக, பட்டினிப்பிரதேசமாக மாத்தணும்னு பா.ஜ.க நினைக்குது. 50 வருஷத்துக்கு பா.ஜ.க ஆட்சி செய்யும்னு அமித்ஷா சொல்றாரு. அவருக்கு பைத்தியம் பிடிச்சிருச்சுனு நினைக்கிறேன். புத்திகெட்டங்வங்கதான் இந்த மாதிரி பேசுவாங்க. மறுபடியும் பா.ஜ.க ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. மோடியை மாத்திட்டு, வேறொரு கேடியை கொண்டாந்தாலும், பா.ஜ.க தோத்துதான் போகும்’’ என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!