`நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோகும்!’ - திட்டக்குடி அரசு மணல் குவாரிக்கு வலுக்கும் எதிர்ப்பு

அரசு மணல் குவாரியை ரத்து செய்யக் கோரி திட்டக்குடி வணிகர்கள் சங்கம் சார்பில் அரை நாள் கடையடைப்பு நடத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திட்டக்குடியில் அரசு மணல் குவாரி செயல்படத் தொடங்கினால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அப்பகுதி வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திட்டக்குடி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இளமங்கலம் பகுதியில் வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி தொடங்க வருவாய்த்துறையினர் 
நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மணல் குவாரி தொடங்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகளின் 
வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி பொது மக்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு 
தெரிவித்து வருகின்றனர். இவர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், முற்றுகை எனப் பல கட்டப் போராட்டங்களை நடத்தி 
வருகின்றனர். இந்நிலையில் அரசு மணல் குவாரியை ரத்து செய்ய கோரித் திட்டக்குடி வணிகர்கள் சங்கம் சார்பில் 
அரை நாள் கடையடைப்பு நடத்தப்பட்டது. அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த 
ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசியல் கட்சி பிரமுகர்களும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளும் 
ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!