`அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அதிரடி முடிவு!’ - ரஜினியின் அரசியல் பிளான்

நடிகர் ரஜினி, 10 நாள் பயணமாக இன்று (23.4.2018) அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்லவிருக்கிறார். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அதிரடியான அரசியல் முடிவுகளை அவர் அறிவிக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரஜினி

ரஜினி வாய்திறந்தாலும் விமர்சனம், மெளனமாக இருந்தாலும் விவாதம் என்று ரவுண்டுகட்டி பட்டிமன்றம் நடத்தி வந்த தமிழ் சேனல்களுக்கு 10 நாள்கள் விடுமுறை தரப்போகிறார் ரஜினி. சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு, அமெரிக்காவில் தங்கியிருந்து ஆரம்பத்தில் சிகிச்சை பெற்றார், அதன்பின்  தயானந்த சரஸ்வதியின் ஆசிரமத்தில் மூத்தமகள் ஐஸ்வர்யாவுடன் தங்கி ஓய்வு எடுத்தார். இடையில் ஒருமுறை அமெரிக்கா சென்று வந்தார். இப்போது செல்வது நார்மல் மெடிக்கல் செக்கப், உடல்முழுக்க மாஸ்டர் செக்கப் செய்வதற்கு 3 நாள்கள் மருத்துவமனையில் தங்கி சோதனை செய்துகொள்கிறார். சென்னைக்குத் திரும்பிய பிறகு, பரபரவென அரசியல் நகர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகிறார்.

அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு 12 மணியளவில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம், பொறுப்பாளர் சுதாகர் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ரஜினி அரசியல் ஆலோசனை நடத்தினார். 'என்னைப் பற்றி யார் எப்படிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தாலும், ஆவேசப்பட்டு பதில் தர வேண்டாம். நான் திரும்பி வந்தபிறகு, எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொல்லிக் கொள்கிறேன்' என்று அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், ஆடிட்டர் குருமூர்த்தியையும் சந்தித்து ரஜினி பேசியிருக்கிறார். இன்று (23.4.2018) இரவு அமெரிக்கா செல்லும் ரஜினி, 3 நாள்கள் மட்டும் நார்மலான உடல் பரிசோதனையை செய்துகொள்கிறார். அதன்பிறகு ஒருவாரம் தங்கி தனக்கு அவ்வப்போது அருள்வாக்கு தரும் தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கி தியானம் செய்கிறார். ஒருசில நாள்கள் ரிலாக்ஸ் செய்துகொண்டு சென்னை திரும்ப அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதன் பின்னர், அதிரடியான அரசியல் முடிவுகளை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருக்கிறாராம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!