பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை! - பெரியகுளம் மக்கள் புகார்

இரண்டு பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மார்க்.! – இது பெரியகுளம் அவலம்.!

தேனி மாவட்டம் பெரியகுளம் புது பேருந்துநிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, இன்று கலெக்டர் அலுவலகத்தில் பெரியகுளம் வடகரை பொதுமக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய காத்தமணி, ‘’பெரியகுளம் புது பேருந்துநிலையம் அருகே ரஹீம் சகோதர்கள் பள்ளி, சரஸ்வதி நடுநிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகளும், தபால் நிலையம், திருமண மண்டபம் ஆகியவை உள்ளன. இப்படி ஒரு இடத்தில் டாஸ்மாக் கடை இருப்பது சட்டவிரோதமானது.

மேலும், இந்த டாஸ்மார்க் கடையால் தினமும் மாலையில் அப்பகுதியில் நடந்துவரும் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியைகளுக்கும் பல்வேறு தொந்தரவுகளை குடிகாரர்கள் ஏற்படுத்திவருகிறார்கள். இதனால், பேருந்து நிலையத்துக்கு வரமுடிவதில்லை. அச்சத்தில் பலர் இப்பாதையைப் பயன்படுத்துவதே இல்லை. இதைப் பயன்படுத்தி, தனியாக வரும் பெண்களிடம் பாலியல் தொல்லைகளைக் கொடுத்துவரும் போதை ஆசாமிகள், செயின் பறிப்புச் சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். பல முறை காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. அதனால்தான் இன்று கலெக்டரிடம் முறையிட வந்தோம். கோரிக்கை மனு அளித்திருக்கிறோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!