மோடி அறிவித்த ரூ.15 லட்சம் எப்போது கிடைக்கும்..! ஆர்.டி.ஐ பதில் என்ன? 

மோடி அறிவித்த 15 லட்சம் எப்போது கிடைக்கும்?

மோடி அறிவித்த ரூ.15 லட்சம் எப்போது கிடைக்கும்..! ஆர்.டி.ஐ பதில் என்ன? 

டந்த பொதுத்தேர்தலின்போது, கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். கறுப்புப் பணத்தை மீட்பதற்காக மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி, மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி எப்போது மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சத்தைச் செலுத்துவார். செலுத்தப்படும் தேதி ஆகியவற்றை அளிக்கும்படி கேட்டிருந்தார். இதே கேள்வியை பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கும் மோகன்குமார் அனுப்பியிருந்தார். 

மோடி அறிவித்த 15 லட்சம் எப்போது கிடைக்கும்?

மோகன் குமார் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.மாத்தூரிடம் மோகன் குமார் புகார் அளித்தார். ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் நடந்த விசாரணையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், பிரதமர் மோடி அறிவித்த வாக்குறுதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 'தகவல் ' என்பதன் கீழ் இடம் பெறவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 2-ன் கீழ் ஆவணங்கள், மின்னஞ்சல், பத்திரிகைக் குறிப்புகள் மின்னணு வடிவத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். பிரதமர் மோடி அவ்வாறு வாக்குறுதி அளிக்கவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!