பொறியியல் கலந்தாய்வுக்கு 42 உதவி மையங்கள்... உங்கள் ஏரியாவில் இருக்கிறதா?

பொறியியல் கலந்தாய்வுக்கு 42 உதவி மையங்கள்... உங்கள் ஏரியாவில் இருக்கிறதா?

அதிகமான வேலைவாய்ப்பை வழங்குவதில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், பொறியியல் நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன. இதனால் தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேருக்கு மேல் பொறியியல் படிப்பில் சேர்கின்றனர். இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு இணையம் வழியே நடக்க இருக்கிறது. இதற்கான விண்ணப்பம் மே 3-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. 

பொறியியல் கலந்தாய்வு

``அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு மே 3-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை பதிவு செய்துகொள்ளலாம். விண்ணப்பம் செய்வதற்கு உதவியாக 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்றார் உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்.

இனி, மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே பொறியியல் கல்லூரியையும், படிப்பையும் தேர்வு செய்துகொள்ளலாம். ஆன்லைனின் விண்ணப்பம் செய்வதற்கான முறைப்படி அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் 29-ம் தேதி வெளியிடப்படுகிறது. 

விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கப்படும். மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தேதி முடிவான பின்பு ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஆன்லைன் வழியே கலந்தாய்வு நடத்தப்படும். ஆன்லைன் வசதி இல்லாத மாணவர்களுக்காக, தமிழ்நாடு முழுவதும் 42 பொறியியல் கலந்தாய்வு உதவி மையங்கள் அமைக்கப்படுகின்றன. 

 

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்கள்
1 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி
2 அரியலூர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி அரியலூர்
3 கோவை அரசு தொழில்நுட்பக்கல்லூரி கோவை
4 கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் கோவை
5 கோவை கோயமுத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கோவை
6 கடலூர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி பண்ரூட்டி
7 கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம்
8 திண்டுக்கல் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திண்டுக்கல்
9 தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி தருமபுரி
10 ஈரோடு சாலை போக்குவரத்து தொழில்நுட்பக் கல்லூரி பெருந்துறை
11 ஈரோடு பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி பெருந்துறை
12 காஞ்சிபுரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காஞ்சிபுரம்
13 காஞ்சிபுரம் எம்.ஐ.டி கல்லூரி குரோம்பேட்டை சென்னை
14 கன்னியாகுமரி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி நாகர்கோவில்
15 கிருஷ்ணகிரி அரசு பொறியியல் கல்லூரி பர்கூர்
16 கரூர் கரூர் அரசு கலைக்கல்லூரி தந்தோணிமலை
17 மதுரை அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் மதுரை
18 மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மதுரை
19 நாமக்கல் திருவள்ளூர் அரசு கலைக்கல்லூரி ராசிபுரம்
20 நாகப்பட்டினம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி  திருக்குவளை
21 பெரம்பலூர் பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கீழகனவை
22 புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி அறங்தாங்கி
23 ராமநாதபுரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி புலங்குடி
24 சேலம் அரசு பொறியியல் கல்லூரி சேலம்
25 சிவகங்கை ஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி  காரைக்குடி
26 தஞ்சாவூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பட்டுக்கோட்டை
27 தஞ்சாவூர் அரசு பொறியியல் கல்லூரி செங்கிப்பட்டி
28 நீலகிரி நீலகிரி அரசு கலைக்கல்லூரி உதகமண்டலம்
29 தேனி அரசு பொறியியல் கல்லூரி போடிநாயக்கனூர்
30 திருவள்ளூர் முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆவடி
31 திருவாரூர் அரசு பாலிடெனிக் கல்லூரி வலங்கைமான்
32 திருவண்ணாமலை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி ஆரணி
33 திருப்பூர் சிக்கண்ணா நாயக்கர் அரசு கலைக்கல்லூரி கொங்கணகிரி 
34 திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் திருநெல்வேலி
35 திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி திருநெல்வேலி
36 தூத்துக்குடி வி.ஒ.சி பொறியியல் கல்லூரி தூத்துக்குடி
37  திருச்சி பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி,பாரதிதாசன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி வளாகம் திருச்சி
38 திருச்சி அரசு பொறியியல் கல்லூரி ஶ்ரீரங்கம்
39 வேலூர் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வேலுர்
40 விழுப்புரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காகுப்பம், விழுப்புரம்
41 விழுப்புரம் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி திண்டிவனம்
42 விருதுநகர் வி.எஸ்.வி.என் பாலிடெக்னிக் கல்லூரி ரோசல்பட்டி  

பொதுப்பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 500 ரூபாய், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சார்ந்தவர்களுக்கு 250 ரூபாய் பதிவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தலாம். உதவி மையத்துக்குச் செல்லும் முன், மாதிரி விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்தால், ஆன்லைனில் பதிவு செய்யும்போது எளிதாக இருக்கும். 

இந்த உதவி மையங்களில் ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அப்போது கல்லூரி பற்றிய தகவல் கையேடு வழங்கப்படும். ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!