'விஸ்வாசம்' டீம் செய்யப்போகும் சாகசம்

ஸ்டிரைக்கால் படப்டிப்பிடிப்பு பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் விஸ்வாசம் படம் ஷுட்டிங் அப்டேட்

அஜித்

அஜித்குமார், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்க உள்ளப் படம், `விஸ்வாசம்'. சமீபத்திய அஜித் படங்களில் இல்லாத வகையில் டைட்டில் ஃபிக்ஸ் செய்யப்பட்டுவிட்டது. படப்பிடிப்புக்கு முன்னரே, படத்தின் பெயர் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம்  தொடங்குவதாக இருந்த நிலையில் ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

விஸ்வாசம்

கோலிவுட்டின் டாப் ஸ்டார்ஸ் அஜித், நயன்தாரா மட்டுமல்லாமல் யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா எனப் பல பிசியான ஆள்களின்  கால்ஷீட் தேதியையும் பெற்றிருக்கிறார்கள். ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முதல்கட்டப் படப்பிடிப்பை நடத்துவதற்காக, பிரமாண்ட செட் ஒன்று மார்ச் மாதம் முதலே படக் குழுவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், மே 4 முதல் 'விஸ்வாசம்' ஷூட்டிங் நடக்கவிருக்கிறது. பல நடிகர்களின் கால்ஷீட் தேதிகளை வாங்கிவைத்திருந்த டைரக்டர் சிவா, இப்போது கால்ஷீட்டால் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரிசெய்துவருகிறார். படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஷூட்டிங் ஆரம்பித்து ஆறு மாதத்துக்குள் படத்தை வெளியிடும் பெரிய சாகசத்தைச் செய்ய உள்ளனர், அஜித் அண்ட் கோ.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!