3 நாள்களுக்குப் பிறகு கன்னியாகுமரியில் படகு சேவை தொடங்கியது!

கன்னியாகுமரியில் மூன்று நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பூம்புகார் படகு சேவை தொடங்கியது.

ன்னியாகுமரியில், மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று காலை பூம்புகார் படகு சேவை தொடங்கியது.

கன்னியாகுமரியில் படகுசேவை துவக்கம்

கன்னியாகுமரியில், கடல் சீற்றம் காரணமாகக் கடந்த மூன்று நாள்களாக விவேகானந்தர் நினைவுப் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடல் சீற்றம் காரணமாக, மாவட்டம் முழுவதும் மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவதியடைந்தனர். அது மட்டுமல்லாது, தேங்காய்நார் உற்பத்திக்காக தோப்புகளுக்குள் ஊறவைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளை கடல் அலைகள் இழுத்துச்சென்றன. இந்த நிலையில், இன்று கடல்சீற்றம் தணிந்து, இயல்புநிலைக்குத் திரும்பியது. இதையடுத்து, கன்னியாகுமரி கடலில் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுப் போக்குவரத்து மீண்டும் துவங்கியது. மூன்று நாள்களுக்குப் பிறகு படகுப் போக்குவரத்து தொடங்கியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!