வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (24/04/2018)

கடைசி தொடர்பு:13:09 (24/04/2018)

தினமும் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் கையெழுத்து! மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்

செங்கல்பட்டு காவல் நிலையத்தில் தினந்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடிகர் மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் போராட்டம் நடைபெற்றது. சீமான் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மன்சூர் அலிகானும் கலந்துகொண்டார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில், 18 பேர் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்

மன்சூர் அலிகான் தரப்பில் ஜாமீன் கேட்டு சீமானின் வழக்கறிஞர் சீனுவாச குமார் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரும் மறு உத்தரவு வரும்வரை திருத்தணி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெடுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ள நீதிபதி செல்வகுமார், மன்சூர் அலிகான் உடல் நிலையைக் கருதி அவர் மட்டும் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க