கொள்ளிடத்தில் ஒரு பிடி மண்ணை அள்ளினால்... அதிகாரிகளை எச்சரித்த கிராம மக்கள்

``ஒருபிடி மண்ணை அள்ளினால் இங்கு கொலையே நடக்கும். கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் தொடர் போராட்டம் நடத்துவோம்'' என்று அதிகாரிகளை எச்சரித்துள்ளனர் கிராம மக்கள். அரியலூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கு விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைத்துக்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீறி மணல்குவாரி அமைத்தால் எங்களது போராட்டமே வேறு விதமாக வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

                                  

அரியலூர் மாவட்டம், திருமானூரில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கண்டன பேரணி, மனிதச்சங்கிலி, வீடுகளில் கறுப்புக்கொடி போன்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மணல் குவாரி அமைக்கும் பணிக்கு ராட்சத மண் அள்ளும் எந்திரங்கள் மற்றும் பொக்லைன் இயந்திரங்களை அதிகாரிகள் கொண்டு வந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள், ஒருபிடி மண்ணை அள்ளினால் இங்கு கொலை நடக்கும்' என்று எச்சரித்து மிரட்டி அனுப்பினார்கள். பின்பு போராட்டக்காரர்கள் கொள்ளிட ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

                        

இந்நிலையில் அரியலூர் கலெக்டர் கூட்டரங்கில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விவசாய சங்கத்தினர், '8 மாவட்டங்களுக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே அரசு அமைத்த மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு தண்ணீரின் தன்மை மாறி உபரிநீராக விவசாயத்துக்குச் சற்றும் பயனற்றதாக உள்ளது. தற்போது புதிய மணல்குவாரி அமைப்பதால் டெல்டா பகுதியான திருமானூர் பாலைவனமாகும் சூழ்நிலையும் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாகப் பாதிக்கப்படும் என்றும் கலெக்டர் முன்னிலையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர். கலெக்டர் கூட்டரங்கில், விவசாயிகள் அல்லாத சிலர் அரசுக்கு ஆதரவாக ஆட்கள் தயார் செய்யப்பட்டு பேசும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!