தூத்துக்குடி பேராசிரியைக்கு சம்மன்! - நிர்மலாதேவி விவகாரத்தில் அடுத்த திருப்பம்

அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் கைபேசிகளில் உள்ள எண்களைக் கொண்டு அதில் சந்தேகிக்கும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி வருகிறது சி.பி.சி.ஐ.டி. அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

அருப்புக்கோட்டை கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவியின் கைப்பேசிகளில் உள்ள எண்களைக் கொண்டு அதில் சந்தேகிக்கும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி வருகிறது சி.பி.சி.ஐ.டி. அதன்படி தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

நிர்மலா தேவி

மாணவிகளைப் பாலியல் ரீதியான தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார் பேராசிரியை நிர்மலாதேவி. இவரிடமிருந்து 3 போன்களும் 5 சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன. அவர் பயன்படுத்திய செல்போன் நம்பர்களின் கால் ஹிஸ்டரி, சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு அதில், அவர் நீண்ட நேரமாகப் பேசியவர்கள் யார், யார் என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் விசாரணை செய்ய தனியாக மூன்று டீம் போலீஸார் களம் இறங்கியுள்ளதாகவும், அதில் அருப்புக்கோட்டை நகராட்சி ஒப்பந்தக்காரர்கள், பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள், உள் மாவட்ட வெளி மாவட்ட பேராசிரியர்கள் வரை பல தரப்பினர் அடங்கிய பட்டியல் தயாராகியுள்ளதாகவும்  சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரை அருகில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியின் தாவரவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியை ஜெஸிந்தா தமிழ்மலர் என்பவருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது. விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்படாமல் தனியாக வேறு ஓர் அரசு அலுவலகத்தில் வைத்து பேராசிரியை ஜெஸிந்தா விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் சிலரிடம் பேசினோம், “கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தூத்துக்குடி பேராசிரியை, நிர்மலாதேவியுடன் அறிமுகம் ஆகியுள்ளார் பேராசிரியை ஜெஸிந்தா. தொடர்ந்து, போனில் இருவரும் பேசி வந்துள்ளனர். நிர்மலாதேவியுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஹெஸ்ட் ஹவுசில் இவரும் தங்கி இருந்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். “மதுரைக்கு டூர் சென்ற இடத்தில்தான் எனக்கு நிர்மலாதேவியின் அறிமுகம் கிடைத்தது. அதனால் அவருடன் சேர்ந்து தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு, அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை” என விசாரணையில் பேராசிரியை ஜெஸிந்தா பதில் கூறியதாகத் தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!