சஞ்சய் தத் வாழ்க்கையைச் சொல்லும் `சஞ்சு' படத்தின் டீசர்! | sanjay dutt biopic movie sanju teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (24/04/2018)

கடைசி தொடர்பு:17:04 (24/04/2018)

சஞ்சய் தத் வாழ்க்கையைச் சொல்லும் `சஞ்சு' படத்தின் டீசர்!

பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு `சஞ்சு' என்ற பெயரில் உருவாகியுள்ளது. `த்ரீ இடியட்ஸ்', `பி.கே' படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிராணி இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. பாலிவுட் நட்சத்திரங்கள் சுனில் தத் மற்றும் நர்கிஸ் தத் ஆகியோருக்கு மகனாய்  பாலிவுட்டில் நுழைந்த சஞ்சய் தத் பின்னாளில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.   

சஞ்சு

போதை வஸ்துக்கு அடிமை, 1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் தொடர்பு, சிறைவாசம், நட்சத்திர குடும்பத்தில் வாரிசு வாழ்க்கை எனப் பலதரப்பட்ட வாழ்க்கையை அனுபவித்து வருபவர் சஞ்சய் தத். இப்படத்தில் ரன்பீர் கபூர், சோனம் கபூர், மனிஷா கொய்ராலா, ப்ரேஷ் ராவேல் எனப் பலரும் நடித்துள்ளனர். சஞ்சு படம் ஜூன் 29-ம் தேதி வெளிவருகிறது.