வெளியிடப்பட்ட நேரம்: 05:59 (25/04/2018)

கடைசி தொடர்பு:07:47 (25/04/2018)

ஸ்டெர்லைட்ஆலை காப்பர் மணல் இறக்குமதிக்கு அனுமதி அளிக்ககூடாது - துறைமுக சேர்மனிடம் அ.ம.மு.க மனு

ஸ்டெர்லைட் ஆலைக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை காலாவதி ஆகிவிட்டதால், காப்பர் மணல் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என த.ம.மு.க.,வினர் தூத்துக்குடி துறைமுக சேர்மன் ஜெயகுமாரிடம் மனு அளித்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை காலாவதி ஆகிவிட்டதால், காப்பர் மணல் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என அ.ம.மு.க-வினர் தூத்துக்குடி துறைமுக சேர்மன் ஜெயகுமாரிடம் மனு அளித்தனர்.

ammk party district secratary give pettition to port chairman

ஸ்டெர்லைட் ஆலைக்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணையை புதுப்பித்து வழங்கி, மீண்டும் ஆலை இயங்கிட அனுமதி அளிக்கக் கூடாது என ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கத்தை துவக்கி முதல்கட்டமாக 15 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெற்று, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளரிடம் அ.ம.மு.க-வினர் வழங்கினர். தொடர்ந்து, ``எம்.வி.லா டோண்டா” என்ற கப்பலில் ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருளான காப்பர் மணலை சுங்க இலாகா சட்டத்தின் படி இசைவாணை காலாவதியான நிறுவனத்துக்கு வரும் சரக்குகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கக் கூடாது என சுங்க இலாகா ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்காக தற்பொழுது, மால்டா நாட்டில் இருந்து ”எம்.வி.சான் பெக்லிஸ் ஐ” என்ற கப்பலில் காப்பர் மணல் இறக்குமதிக்காக கொண்டு வரப்பட்டு சரக்கு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக சபை சேர்மன் ஜெயகுமாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.ம.மு.க., செயலாளர் ஹென்றி தாமஸிடம் பேசினோம், ``ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி  மாவட்டம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் இந்த ஆலைக்கான சுற்றுச்சூழல் வாரியத்தின் இசைவாணை (காற்று மற்றும் நீர்) முடிவடைந்துவிட்டது. இந்நிலையில்,  கடந்த 20-ம் தேதி, மால்டா நாட்டில் இருந்து காப்பர் உற்பத்தியின் மூலப் பொருளான காப்பர் மணலை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து காப்பர் மணல் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயங்க அனுமதி இல்லாத ஆலைக்கு வரும் காப்பர் மணலை அனுமதிப்பது   சட்டவிரோதம் ஆகும்.

துறைமுகத்தில் பிளாட் ஒதுக்கீடு செய்து காப்பர் தாதுவினைக் கொட்டவோ மற்றும் பண்டக காப்பகத்தில் குவித்து வைக்கவோ சிவப்பு பிரிவு ஆலைக்கு அனுமதி இல்லை. இனி அனுமதி அளிக்கக் கூடாது என மனு அளித்துள்ளோம். மனுவைப் பெற்றுக்கொண்ட சேர்மன், ’மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து முறையான கடிதம் வரவில்லை. கடிதம் கிடைத்தால்தான் இறக்குமதிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்க முடியும்.’ என்றார். அக்கடிதம் வழங்கிட வலியுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளருக்கு மனு அளிக்க உள்ளோம்'  என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க