கருணாஸ் மீது தாக்குதல் சம்பவம் ஏதும் நடக்கவில்லை..! ராமநாதபுரம் எஸ்.பி மறுப்பு.

 திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் மீது யாரும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இதுவரை புகார் எதுவும் தரவில்லை என ராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கருணாஸ் மீது யாரும் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இதுவரை புகார் எதுவும் தரவில்லை என ராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

கருணாஸ் எம்.எல்.ஏ மீது தொகுதிக்குள் தாக்குதல் ஏதும் நடக்கவில்லை என எஸ்.பி தகவல்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்த முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தனக்கு வாகன போலீஸாரின் பாதுகாப்பு இல்லை எனவும் தொகுதிக்குள் சென்றால் கல்வீசுகிறார்கள் என்பதால் தொகுதிப் பக்கம் அதிகமாக வர முடியவில்லை.நான் செல்லும் பகுதிகளில் கருப்புக் கொடி காட்டுகிறார்கள் எனவும் தனக்கும் தனது அமைப்பினருக்கும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாள்ர்.ஓம்பிரகாஷ் மீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவரது தொகுதிக்கு செல்லும் போது அவர் மீது கல்வீசித்தாக்கிய சம்பவம் எதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்தது தொடர்பாக அவரோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இதுவரை எங்களிடம் புகார் எதுவும் தரவில்லை.  சட்டமன்ற உறுப்பினரான கருணாஸ் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைந்தவுடனே அவருக்கு துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் தற்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீஸார் காவல்துறை  வாகனத்துடன்(எஸ்காட்)அவரது பாதுகாப்புக்கு செல்கின்றனர்' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!