பிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா! | Sachin Tendulkar Fans raise voice against Australia twwet

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (25/04/2018)

கடைசி தொடர்பு:03:00 (25/04/2018)

பிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

சச்சின் தெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

பிறந்த நாளில் வீடியோ வெளியிட்டு சச்சினை அவமதித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!

ச்சின் தெண்டுல்கர் நேற்று 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். உலகம் முழுக்கவுள்ள கிரிக்கெட் ரசிகள், முந்நாள், இந்நாள் வீரர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர் ஆனால், எப்போதுமே ஆணவமாக செயல்படும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மட்டும் வழக்கம் போல தன் புத்தியை காட்டியது. கிரிக்கெட் உலகின் ஆதர்ஷ நாயகனாக பார்க்கப்படும் சச்சினை அவமதிக்கும் வகையில், ட்விட் பக்கத்தில்  வீடியோ ஒன்றை பதிவிட்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் டெமைன் ஃப்ளமிங்கின் பந்துவீச்சில் சச்சின் க்ளீன் போல்டு ஆன வீடியோ அது.  நேற்று  ஃப்ளமிங்குக்கும் பிறந்த நாள்.  அதனால், சச்சின் விக்கெட்டை ஃப்ளமிங் வீழ்த்தும் வீடியோ வெளியிட்டு அவருக்கு மட்டும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தது 

சச்சின் பிறந்த நாள்

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயலால் சச்சின் ரசிகர்கள் கொந்தளித்தனர். சச்சின் பிறந்த நாளில் வாழ்த்து சொல்லாவிட்டாலும் பரவாயில்லை அவரை அவமதிப்பது போல வீடியோ வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 'ஸ்மித், வார்னர் பிறந்த நாளில் பந்தை சேதப்படுத்துவது போன்ற  வீடியோவை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட வேண்டும்' என்று ரசிகர்  ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 'ஆஸ்திரேலிய வீரர்கள் ஏன் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறது' என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். 'கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயல் வெட்கக் கேடானது. ஸ்மித், வார்னர் போன்றவர்களுக்கு நீங்கள்தானே பயிற்சி அளிக்கிறீர்கள். உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் கீழ்த்தரமான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒரு நாளும் திருந்தாது என்று  இன்னொரு ரசிகர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க