கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்பு ; காங்கிரஸ் கழுத்தைப் பிடிக்கிறது பாரதிய ஜனதா!

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளை இழக்கிறது.

கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்பு ; காங்கிரஸ் கழுத்தைப் பிடிக்கிறது பாரதிய ஜனதா!

ர்நாடகாவில், மே 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்று பல மீடியாக்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 91 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 89 இடங்கள் கிடைக்கும் என்றும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 40 இடங்கள் கைப்பற்றும் என்றும், அதனால் ஜனதா தள (எஸ்) கட்சியின் ஆதரவு பெறும் கட்சியே  ஆட்சியை அமைக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 

முதலமைச்சராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, 46 சதவிகிதம் பேர் சித்தராமையாவுக்கும் 32 சதவிகிதம் பேர் எடியூரப்பாவுக்கும் ஆதரவு அளித்துள்ளனர். கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு 113 தேவை. இந்த கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ் 31  தொகுதிகளை (2013 தேர்தலில்122 தொகுதிகளில் வெற்றி ) இழக்கிறது. பாரதிய ஜனதாவுக்கு 49 சீட்டுகள் கூடுதலாகக் கிடைக்கின்றன. 2013- தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 40 தொகுதிகளில்தான் வெற்றிபெற்றிருந்தது.  ஏப்ரல் 4-ம் தேதி முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை 4 ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவு இது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!