வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (25/04/2018)

கடைசி தொடர்பு:08:20 (25/04/2018)

ஒட்டு கட்டுதல், கவாத்துசெய்தல்! களத்தில் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள்

பல வகையான செடிகள் தொடர்பாக தெரிந்து கொண்டோம்.பதியம் போடுதல்,ஒட்டு கட்டுதல் போன்றவை எங்களை வியப்பில் ஆழ்த்தியது

தேவகோட்டை அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.  பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.

மாணவர்கள்

மாணவர்களை வரவேற்ற அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலர் தர்மர், மாணவர்களுக்கு மல்லிகை, கத்திரி, மாமரம், புளியமரம், முந்திரி, பூவரசு, கொய்யா, அரளி போன்ற செடி கொடி, மரங்கள்குறித்து விளக்கினார். ஒட்டு கட்டுதல், பதியன்போடுதல், கவாத்து செய்தல், குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்திசெய்வது போன்றவற்றை நேரடி செயல் விளக்கம்மூலம் செய்துகாண்பித்து விளக்கினார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மாதுளைச் செடிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் தாங்கள் பண்ணைக்கு வந்ததன் நினைவாக, பண்ணை வளாகத்தில் செடிகளை நட்டனர்.

இந்த களப்பணிகுறித்து மாணவர்கள் , "பல வகையான செடிகள் தொடர்பாகத் தெரிந்துகொண்டோம். பதியன் போடுதல், ஒட்டு கட்டுதல் போன்றவை எங்களை வியப்பில் ஆழ்த்தியது. பல்வேறு புதிய செடிகள் குறித்தும் பழங்கள் குறித்தும் தெரிந்துகொண்டோம். தாவரங்களின் அறிவியல் பெயர்களையும் தெரிந்துகொண்டோம். வேளாண்மை, ஒட்டு கட்டுதல், கவாத்துசெய்தல், அதனால் ஏற்படும் நன்மைகள் என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இந்த அனுபவம் மகிழ்ச்சியாக உள்ளது" என்றனர்.