வழுக்கும் பாறைகள்... மேடு பள்ளம்... சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் திற்பரப்பு அருவி

திற்பரப்பில் ஆபத்தான குளியல்போடும் சுற்றுலா பயணிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் திற்பரப்பு அருவி

 

'திற்பரப்பில், ஆபத்தான குளியல்போடும் சுற்றுலாப் பயணிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் சுற்றுலாத் தலம், திற்பரப்பு. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தடுப்பணையை ஒட்டி பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. அதிலும், பாசி படர்ந்து வழுக்கும் நிலையில் உள்ள பாறைகள், மேடு பள்ளமாக அமைந்துள்ளது. இதனால், சில பகுதிகள் ஆழம் குறைவானதாகவும் சில பகுதிகள் மிகவும் ஆழமானதாகவும் உள்ளன. இதனால், இந்தப் பகுதியில் படகு சவாரிகூட தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், திற்பரப்பு தடுப்பணைப் பகுதியில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், 'மிகவும் ஆபத்தானது, யாரும் தண்ணீரில் இறங்கக்கூடாது' என போர்டு வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான குளியல்போடும் சுற்றுலா பயணிகள்

ஆனால், திற்பரப்புக்கு சுற்றுலா வரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் தடுப்பணைப் பகுதியில் ஆனந்தமாகக் குளியல்போடுகிறார்கள். அவர்களைத் தடுக்க அங்கு ஊழியர்கள் யாரும் இல்லை. அசம்பாவிதம் நேரும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!