வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (25/04/2018)

கடைசி தொடர்பு:12:35 (25/04/2018)

தடம்புரண்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்! அலறியடித்து இறங்கி ஓடிய பயணிகள்

திருச்சியில், பல்லவன் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்
 
காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், வழக்கம்போல இன்று காலை திருச்சி கிராப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது, ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கினர். தகவலறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள், சரிசெய்யும் பணியைச் செய்துவருகின்றனர்.  இன்று காலை 6.40 மணிக்கு பல்லவன் ரயில் திருச்சி வரும். இதனால், ரயில் காலதாமதம் ஆவதால் பயணிகள் ஒருபுறம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  மறுபுறம் ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பயணிகளின் உறவினர்கள், சக பயணிகள் அங்கு கூடிவருவதால் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ரயில்வே துறை அதிகாரிகள், இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். ''விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் தெரியவரும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க