பாம்பனில் கரை ஒதுங்கிய கடத்தல் பீடி இலை மூட்டைகள்! | Beedi leaf bundles secluded on the coastal area of the Pamban

வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (25/04/2018)

கடைசி தொடர்பு:10:45 (25/04/2018)

பாம்பனில் கரை ஒதுங்கிய கடத்தல் பீடி இலை மூட்டைகள்!

 பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புடைய பீடி பண்டல்கள் இன்று அதிகாலை கரை ஒதுங்கின. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் அவற்றை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில், இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புடைய பீடி பண்டல்கள், இன்று அதிகாலை கரை ஒதுங்கின. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், அவற்றைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாம்பனில் கரை ஒதுங்கிய கடத்தல் பீடி இலை மூட்டைகள்!

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் இருந்து போதை மருந்துகள், கஞ்சா, கடல் அட்டை , பீடி பண்டல்கள் ஆகியன இலங்கைக்கு கடத்திச் செல்வது தொடர்ந்துவருகிறது. தற்போது, விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதால், விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடிக்கச் சென்றுவருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில், ஏராளமான மூட்டைகள் கரை ஒதுங்கிக் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், குந்துகால் பகுதிக்குச் சென்று கரை ஒதுங்கிக் கிடந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றைக் கைப்பற்றிய போலீஸார், பீடி மூட்டைகளைக் கடத்திச் சென்றவர்கள்குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை மூட்டைகளைக் கடத்திச்சென்றபோது, கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்புப் படையினர், அங்கு வந்திருக்கக் கூடும் எனவும்,  அதனால், அவர்களிடமிருந்து தப்பிக்க, கடத்தல்காரர்கள் பீடி இலை பண்டல்களைக் கடலில் வீசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதேபோல ஏராளமான பீடி இலை மூட்டைகள் குந்துகால் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.