வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (25/04/2018)

கடைசி தொடர்பு:12:37 (25/04/2018)

நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

நிர்மலா தேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி அக்கல்லூரியில் கணிதத்துறை மாணவிகளை தவறான வழியில் நடத்த முயன்ற வழக்கில் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். தன்னை இவ்வாறு செய்ய வற்புறுத்தியது காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்று விசாரணையில் அவர் கூறிய தகவலை அடுத்து இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகனை கடந்த 23-ம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் பல உண்மைகளை அவர் கூறிய நிலையில், நேற்றிரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நிர்மலாதேவி கூட்டாளி

கருப்பசாமியை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தேடி வந்த நிலையில், இன்று காலை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரைக் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி-யினர் விசாரணையை தொடங்க உள்ளனர். இதுவரை தங்கள் பல்கலைக்கழகத்துக்கும் நிர்மலா தேவிக்கும் சம்பந்தமில்லை என்று துணைவேந்தர் கூறி வரும் நிலையில் உதவிப்பேராசிரியர் முருகனும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் இந்த வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க