`நிர்மலா தேவிமீது தபால் வழியே சில புகார்கள் வந்துள்ளன!’ - சந்தானம் தகவல்

 

சந்தானம்

பேராசிரியர் நிர்மலாதேவியிடம் விசாரணை செய்ய சிறைக்கு நேடியாகச் சென்று தகவல் பெற உள்ளதாக விசாரணை அதிகாரி சந்தனம் குறிப்பிட்டுள்ளார்.

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி தொடர்பான விசாரணை ஆணையர் சந்தானம் இன்று காலை 2-ம் கட்ட விசாரணையைத் தொடங்கினார். விசாரணையில் மதுரை மண்டலக் கல்லூரி கல்வியியல் இணை இயக்குநர் கூடலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் 2 பேர் என 3 பேரிடம் ஆணையர் சந்தானம் விசாரணை நடத்தினார். அவரிடம் ஆஜரான அதிகாரிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களைச் சமர்ப்பித்தனர், இவர்களிடம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி விவகாரம் குறித்தும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், சந்தனம் ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `நிர்மலா தேவி ஆடியோ விவகாரம் குறித்து தபால் வழியே சில புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. மதுரை மத்திய சிறைக்கு நிர்மலா தேவி வந்தவுடன் சிறையில் வைத்து நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவேன், வழக்கில் கைதான முருகன், கருப்புசாமியிடம் விசாரணை நடத்துவேன், இரண்டாம் கட்ட விசாரணை இன்று முதல் சனிக்கிழமை வரை 4 நாள்கள் மதுரையிலும் அருப்புக்கோட்டையிலும் நடைபெறும்’ எனத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!