தாத்தாவான நடிகர் வடிவேலு - சொந்த பந்தங்களுக்கு அசத்தல் விருந்து

தமிழ்நாட்டின் காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இவரது பல காமெடிகளை வைத்துதான் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போடுபவர்களின் வாழ்க்கையே ஓடிக்கொண்டிருக்கிறது. பல முன்னனி நடிகர்களுடன் காமெடி கேரக்டரில் நடித்த வடிவேல் ஹீரோவாக `இம்சை அரசன் 23-ம் புலிகேசி', 'தெனாலிராமன்', 'எலி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். சில ஆண்டுகள் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்த இவர், 'மெர்சல்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். 

வடிவேலு

இதற்குப் பிறகு, ஷங்கர் தயாரிப்பில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் வடிவேல் நடிப்பதாகத் தகவல் வந்தது. அதை உறுதி செய்யும் விதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஆனால், சில காரணங்களால் வடிவேல் இந்தப் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, இவர்மீது தயாரிப்பாளர் சங்கத்தில் படக்குழுவினர் புகார் கொடுத்தனர். இதற்கு, வடிவேல் தரப்பிலிருந்து பதில் கடிதமும் அனுப்பப்பட்டது. 

இதற்கிடையில், இந்தப் பிரச்னைகளையெல்லாம் தாண்டி தற்போது வடிவேல் மகிழ்ச்சியில் உள்ளார். அதற்கு முக்கிய காராணம், தற்போது அவர் தாத்தாவாகியிருக்கிறார். அதுவும் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாத்தாவாகி இருக்கிறார். அவருடைய மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்திருக்கிறது. இதனால், மகிழ்ச்சியில் இருக்கும் வடிவேல் சொந்த பந்தகளுக்கு விருந்து கொடுத்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!