வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (25/04/2018)

கடைசி தொடர்பு:21:20 (25/04/2018)

ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் மனு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதித்து உரிய    உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்., அதில் ``தூத்துக்குடி  மீளவிட்டான் பகுதியில் தற்போது உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தடையில்லாச் சான்று கடந்த மார்ச் மாதம் 31 -ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் மீளவிட்டான் பகுதியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையிலிருந்து வெளியான கழிவுகளால் இப்பகுதியில் காற்று, நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றி உள்ள கிராம மக்கள் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள்  பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வைகோ மனு

இதற்கு மத்திய,  மாநில அரசுகளிடமிருந்து உரிய அனுமதி பெறவில்லை. தற்போது தொழிற்சாலையால் பாதிக்கபட்ட கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, தற்போது உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலை  இயங்குவதற்கும், புதிய தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.