மிஸ்டர் சந்திரமெளலி படத்தின் ட்ரெயிலரை வெளிட்ட மாதவன்..!

`மிஸ்டர் சந்திரமெளலி' படத்தின் ட்ரெயிலரை ட்விட்டரில் வெளியிட்டார் மாதவன்

இயக்குநர் திரு இயக்கத்தில் கார்த்திக், கெளதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமெளலி'. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

மிஸ்டர் சந்திரமெளலி

காரணம், முதன் முறையாக அப்பாவும் மகனும் சேர்ந்து நடிப்பதுதான். மேலும், ரெஜினா, வரலட்சுமி சரத்குமார், சதீஷ், மகேந்திரன் என ஒரு பட்டாளமே நடித்துள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பாக்ஸராக வரும் கெளதம் கார்த்திக், அப்பா கார்த்திக்கின் மீதான பாசம் என டிரெயிலர் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ரெஜினா இந்தப் படத்தில் க்ளாமராக நடித்திருக்கும் போட்டோக்கள் ஏற்கெனவே இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது. போஃப்டா தனஞ்செயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலரை மாதவன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!