எஸ்.வி.சேகரைக் கைதுசெய்யக் கோரி சென்னையில் போராட்டம்!

எஸ்.வி.சேகர்

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தியும் பெண் பத்திரிகையாளர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும்வகையிலும் சமூக ஊடகத்தில்  பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் அவரைக் கைதுசெய்வதில் காவல் துறை சுணக்கம்காட்டுவதாகக் கூறி, அவரை விரைவில் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

எஸ்.வி.சேகர்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாலை 4 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில், எழுத்தாளரும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் முதலில் பேசினார். மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன், மக்கள் கல்வி இயக்கத்தின் பேரா. பிரபா.கல்விமணி, தகவல்தொழில்நுட்பப் பணியாளர் மன்றப் பொறுப்பாளர் பரிமளா, இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அய்யநாதன், வழக்குரைஞர் சுசீலா ஆனந்த், பத்திரிகையாளர் கவின்மலர் உட்பட பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!